ஒரே நாளில் அஞ்சான் - சிங்கம் ரிட்டர்ன்ஸ்!

ஒரே நாளில் அஞ்சான் - சிங்கம் ரிட்டர்ன்ஸ்!

செய்திகள் 26-Jul-2014 4:45 PM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் வித்தியாசமான நடிப்புக்கும், பர்ஃபார்மன்ஸுக்கும் பாலிவுட்டிலும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். சூர்யா நடித்த, ‘சிங்கம்’ ஹிந்தியில் அஜய் தேவ்கன், காஜல் அகர்வால் நடிப்பில் ‘சிங்கம்’ என்ற பெயரிலேயே ரீ-மேக் ஆகி அங்கும் வசூலில் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக வந்த ‘சிங்கம் 2’ படமும் தமிழில் ஹிட்டானது. இப்போது அஜய் தேவ்கன் நடிப்பில் ‘சிங்கம்’ ரிட்டர்ன்ஸ்’ என்று ஒரு படம் உருவாகி, ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது. ஆனால் இப்படம் ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சி இல்லை! இது வேறு கதையாம்! சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தை சூர்யாவின் ‘அஞ்சான்’ படம் வெளியாகும் நாளிலேயே (ஆகஸ்ட் 15) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆக, ஒரே நாளில் சூர்யாவின் ‘அஞ்சானு’ம், அஜய் தேவ்கனின் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸு’ம் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;