இறுதிகட்டத்தில் உத்தம வில்லன்!

இறுதிகட்டத்தில் உத்தம வில்லன்!

செய்திகள் 26-Jul-2014 3:48 PM IST VRC கருத்துக்கள்

வழக்கமாக கமல் நடிக்கும் படங்கள் என்றால் அதை எடுத்து, முடிக்க நிறைய நாட்கள் ஆகும். ஆனால் அவரது ‘உத்தம வில்லன்’ படத்தை குறுகிய நாட்களுக்குள் எடுத்து முடித்துள்ளனர். ஒரு சில பேட்ச் வொர்க்குடன் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முடிந்து விடுமாம். லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா, பார்வதி மேனன், ஜெயராம், நாசர், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் போன்ற பிரபலங்கள் நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும் மலையாள ‘திருசியம்’ ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார் கமல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;