விக்ரம் பிரபு பட விழாவில் கமல்!

விக்ரம் பிரபு பட விழாவில் கமல்!

செய்திகள் 26-Jul-2014 12:43 PM IST VRC கருத்துக்கள்

‘உத்தமவில்லன்’, ‘விஸ்வரூபம் 2’, ‘திருசியம்’ ரீ-மேக் என 3 படங்களின் வேலைகளில் படு பிசியாக இருந்தாலும், கமல்ஹாசன் தனது சக கலைஞர்களின் முக்கியமான பட விழாக்கள் என்றால் அதில் கலந்துகொள்ள தவறுவதில்லை. சமீபத்தில் சந்தானம் நடித்த,‘வாலிபராஜா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழவில் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட்ட கமல்ஹாசன், அடுத்து விக்ரம் பிரபு, நடிப்பில், கௌரவ் இயக்கியுள்ள ‘சிகரம் தொடு’ படத்தின் ஆடியோவை வெளியிட இருக்கிறார். ‘யுடிவி’ தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்திருக்க, ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 7-ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. ‘அரிமா நம்பி’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவரவிருக்கிற இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மோனல் கஜார் நடித்திருக்க, சத்யராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்ரியன் - டிரைலர் 2


;