வெங்கட் பிரபு, அட்லி, பிரேம்ஜியை சந்திக்கணுமா?

வெங்கட் பிரபு, அட்லி, பிரேம்ஜியை சந்திக்கணுமா?

செய்திகள் 26-Jul-2014 12:32 PM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கரின் ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த கார்த்திக் ஜி.கிரிஷ் என்பவர் தற்போது ‘கப்பல்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். ‘ஸ்டியோஸ்’ எனும் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவையும், நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைப்பையும் கவனிக்கிறார்கள். வைபவ், சோனம் பாஜ்வா, கர்ணா, ‘விடிவி’ கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது ‘கப்பம்’ டீம்! அதாவது, 3லிருந்து 6பேர் வரை கொண்ட நண்பர்கள் குழுவாக உங்களின் ‘செல்ஃபி’ போட்டோக்களை கிரியேட்டிவாக ‘க்ளிக்’ செய்து, அதை ‘கப்பல்’ படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி நீங்கள் அனுப்பும் புகைப்படத்தை அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, அதில் எந்த போட்டோவிற்கு அதிக ‘லைக்’ கிடைக்கிறதோ அந்த குரூப்பில் உள்ளவர்களுக்கு தமிழ் சினிமாவின் பிரபலங்களான இயக்குனர்கள் வெங்கட் பிரபு, அட்லி, நடிகர்கள் பிரேம்ஜி, வைபவ், கருணா, கிருஷ்ணா ஆகியோருடன் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒன்றாக அமர்ந்து ‘டின்னர்’ சாப்பிடும் வாய்ப்பு கிடைக்குமாம்!

‘‘எவ்வளவோ ‘க்ளிக்’ பண்ணிட்டோம்... இந்தப் போட்டிக்கும் ஒரு ‘க்ளிக்’ பண்ணி அனுப்புவோம்’’னு நினைக்கிறவங்க உடனே எடுங்க உங்க மொபலை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;