போரை நிறுத்து! உருகும் ஏ.ஆர்.ரஹ்மான்!

போரை நிறுத்து! உருகும் ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 26-Jul-2014 12:20 PM IST VRC கருத்துக்கள்

வசந்த பாலனின் ‘காவியத்தலைவன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 31-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. நாடகக் கலையை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, இப்படத்தில் கிட்டத்தட்ட 20 பாடல்கள் இடம் பெறவிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தப் பாடல்களில் வரும் உருக்கமான ஒரு பாடலை நேற்று தனது ‘சவுன்ட் க்ளவுட்’ அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்!

‘‘உலகமே யுத்தம் எதற்கு…
ஓ உயிர்களே இரத்தம் எதற்கு…
ஓ இறைவனே துயரம் எதற்கு…
ஓ இதயமே வன்மம் எதற்கு…
கண்ணா தேரை நிறுத்து…
எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ…
தேரை நிறுத்து…
போதும் இந்தக் குருதிக் குளியல்…
போரை நிறுத்து….
நாளை உலகம் நலம் பெறும் என்று…
போரை நிறுத்து… போரை நிறுத்து…’’

என்று மகாபாரத கதையில் வரும் சில வரிகளை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இப்பாடலை இரண்டு நாட்களில் 50,000-த்திற்கும் மேற்பட்டோர் கேட்டுள்ளனர். யு-ட்யூபிலும் இப்பாடலுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது காஸா மற்றும் இராக்கில் போரால் நூற்றுக்கணக்கான மனிதர்கள் மடிந்துவரும் இவ்வேளையில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள இப்பாடல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;