ஹாலிவுட்டுக்குச் செல்லும் நயன்தாரா படம்!

ஹாலிவுட்டுக்குச் செல்லும் நயன்தாரா படம்!

செய்திகள் 26-Jul-2014 11:24 AM IST VRC கருத்துக்கள்

ஹிந்தியில் சுஜய் கோஷ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘கஹானி’ இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருந்தார். இப்படம் நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் ரீ-மேக் ஆகி, ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. ஆனால், ஹிந்தி ‘கஹானி’யின் பாதி வெற்றியை கூட தமிழ், தெலுங்கு படங்கள் பெறவில்லை! இப்போது ‘கஹானி’ ஹாலிவுட்டிலும் ரீ-மேக் ஆகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் ‘கஹானி’யை, பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ தயரிக்க, படத்திற்கு ‘டயட்டி’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இப்படத்தை, ‘தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ’ படத்தை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் நீல்ஸ் ஆர்டன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;