தாய்க்கும் பேய்க்கும் நடக்கும் போராட்டம்!

தாய்க்கும் பேய்க்கும் நடக்கும் போராட்டம்!

செய்திகள் 26-Jul-2014 10:55 AM IST Inian கருத்துக்கள்

இயக்குனர் பாரதிராஜாவின் இணை இயக்குனர் எஸ்.வினுபாராதி இயக்கும் திகில் படம் ‘மூச்’. 'கிரேட் பி புரொடக்‌ஷன்' சார்பில் என்.பி.பூபாலன் இப்படத்தை தயாரிக்கிறார். நித்தின், மிஷா கோஷல் இணைந்து நடிக்கின்றனர். பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் மனோதத்துவ நிபுணராக நடிக்கிறார். இப்படம் குறித்து இயக்குனர் வினுபாரதி கூறியதாவது, ‘‘இரு குழந்தைகளை உயிர்மூச்சாக எண்ணி உரிமை கொண்டாடும் ஒரு தாய்க்கும், பேய்க்கும் இடையில் திகிலோடு நிகழும் பாசப் போராட்டமே கதைக் கரு. இப்படம் திகிலுக்கு பஞ்சமில்லாமல் மிரட்டும் படமாக இருக்கும். இந்தப் படம் இப்போது இருக்கும் ட்ரெண்டுக்காக எடுக்கப்பட்டது அல்ல! சமீபத்தில் வெளியான திகில் படங்களுக்கு முன்னரே விவாதிக்கப்பட்டு எடுக்கப்படுவதாக இருந்தது. சில காரணங்களால் முடியாமல் போயிற்று. இந்தப் படம் 50 நாட்களில் எடுக்கப்பட்டடுள்ளது. கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;