நம்பர் 1 இடத்தைப் பிடித்த தனுஷ்!

நம்பர் 1 இடத்தைப் பிடித்த தனுஷ்!

செய்திகள் 26-Jul-2014 10:50 AM IST Chandru கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் அதிரிபுதிரி வெற்றியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் ‘விஐபி’ தனுஷ். இப்படம் வெளியாகி முதல் வாரத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 19 கோடி ரூபாயை வாரிக் குவித்து வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இதுவரை வெளிவந்த எல்லா தனுஷ் படங்களின் முதல் வார வசூலையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது ‘விஐபி’யின் வசூல்! இந்த சந்தோஷம் ஒரு புறமிருக்க, வடக்கேயும் இப்போது தனுஷ் புயல்தான் வீசிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2013ஆம் வருடம் ‘ரான்ஜ்னா’ படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான நடிகர் தனுஷிற்கு அங்கேயும் பலத்த வரவேற்பு. தன் முதல் படத்திலேயே 100 கோடி கிளப்பிலும் இடம்பிடித்தார் தனுஷ். தற்போது ‘2013ம் ஆண்டின் நம்பிக்கை தரக்கூடிய புதுவரவு’ என ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்டுள்ள பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பது யார் தெரியுமா? நம்ம ‘இந்தியன் புரூஸ் லீ’ தனுஷேதான்! இதற்காக நடத்தப்பட்ட இணையதள வாக்கெடுப்பில் பாலிவுட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் தனுஷ். இப்பட்டியிலில் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா 5ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் கடந்த வரும் ‘ஸன்ஜீர்’ படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகியிருந்தார்.

அதோடு தற்போது பால்கியின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசனுடன் தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வர் சுந்தரம் - டீசர்


;