3 படங்களை இயக்கும் பாரதிராஜா!

3 படங்களை இயக்கும் பாரதிராஜா!

செய்திகள் 26-Jul-2014 10:46 AM IST VRC கருத்துக்கள்

‘மைனா’, ‘சாட்டை’ படங்களுக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோ சார்பில் ஜான்மேக்ஸ் தயாரித்துள்ள படம் ‘மொசக்குட்டி’. இப்படத்தை ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கியுள்ளார். அறிமுக நாயகன் வீரா, மஹிமா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. பாடல்களை இயக்குனர் பிரபு சாலமன் வெளியிட, நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமை வகித்தார். விழாவில் பாரதிராஜா பேசியதாவது,

‘‘இங்கே பேசிய பலரும் என்னை மனதில் நினைத்து சினிமாவிற்குள் வந்தோம் என்றார்கள். மகிழ்ச்சி. சினிமாவில் நான் செகன்ட் இன்னிங்ஸ் வரவேண்டும் என்று பேசினர்கள். கலைஞனுக்கு என்றைக்குமே செகன்ட் இன்னிங்ஸ் கிடையாது. ஒரே இன்னிங்ஸ் தான்! எனக்கு ஒரே இன்னிங்ஸ் தான்! சினிமாவை விட்டு போய் விடவில்லை. இனி வரும் இரண்டு ஆண்டுகளில் மூன்று படங்களை இயக்கப் போகிறேன். டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் சினிமா நிறைய மாறியிருக்கிறது. இருந்தாலும் நம் மண்ணின் பண்பாட்டையும், கலசாரத்தையும் பதிவு செய்யுங்கள். எத்தனை பால் கிடைத்தாலும் தாய் பால் போல் வராது! என இளம் இயக்குனர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இளைய தலைமுறை இயக்குனர்கள் என்னை அப்பா என்றழைக்கிறீர்கள். சந்தோஷம். ஆனால் தாத்தாவாக ஆக்கி விடாதீர்கள்’’ என்றார்.

இவ்விழாவில், ‘கலைப்புலி’ தாணு, ஆர்.பி.சௌத்ரி, டி.சிவா, ஞானவேல்ராஜா, சிவகார்த்திகேயன், பிரபு சாலமன், இமான் உட்பட பலர் பலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;