லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘நெருங்கி வா முத்தமிடாதே’

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘நெருங்கி வா முத்தமிடாதே’

செய்திகள் 26-Jul-2014 10:36 AM IST VRC கருத்துக்கள்

தனது முதல் படமான ‘ஆரோகணம்’ மூலம் தமிழ் சினிமா ரசனையாளர்களை தன் பக்கம் இழுத்தவர், இயக்குனர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன். தற்போது இவர் இயக்கி வரும் படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே’. இப்படத்தை ‘ஏ.வி.ஏ’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ‘லூசியா’ பட புகழ் சுருதி ஹரிஹரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, ஷபீர், பியா பாஜ்பாய் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து இயக்குனர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது, ‘‘திருச்சியிலிருந்து காரைக்காலை நோக்கி பயணம் செய்யும் ஒரு லாரி குறிப்பிட்ட நேரத்திற்குள் வராமல் போவதால் ஏற்படும் சம்பவத்தின் திடுக் திருப்பங்களே இப்படத்தின் திரைக்கதை! ‘தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு’ பிரச்சனையும் இப்படத்தில் இடம் பெறும். இதில் லாரி டிரைவராக ஷபீர் நடிக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜி நடிக்கிறார். தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், கும்பகோணம், மலேஷியா ஆகிய பகுதிகளில் படப்பிடித்துள்ளோம். இரண்டு பாடல் காட்சிகளுடன் படம் நிறைவு பெறவுள்ளது. செப்டம்பர் மாதம் வெளியிட தயாராகி வருகிறோம்’’ என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - டீசர்


;