கமல், தனுஷ் படங்களின் ஆடியோ ரைட்ஸை வாங்கிய சோனி!

கமல், தனுஷ் படங்களின் ஆடியோ ரைட்ஸை வாங்கிய சோனி!

செய்திகள் 26-Jul-2014 10:18 AM IST Chandru கருத்துக்கள்

பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கும் கமலின் ‘உத்தம வில்லன்’, தனுஷின் ‘அனேகன்’ ஆகிய படங்களின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறது சோனி மியூசிக் நிறுவனம். இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பிருப்பதால் இவற்றின் ஆடியோ உரிமையை நல்ல விலை கொடுத்து வாங்கியிருக்கிறதாம் இந்நிறுவனம்!

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தை இயக்கி வருபவர் ரமேஷ் அரவிந்த். கமலுடன் ஆன்ட்ரியா, பூஜா குமார் என ‘விஸ்வரூபம்’ கூட்டணி இதிலும் தொடர்கிறது. அதேபோல் படத்தின் இசையமைப்பாளரும் ஜிப்ரான்தான். இயக்குனர் பாலசந்தர் இப்படத்தில் ஒரு முக்கிய வேடமேற்று நடித்து வருகிறார். அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டு படத்தை உருவாக்கி வருவதாக ‘உத்தம வில்லன்’ டீமிலிருந்து தகவல்கள் வருகின்றன.

கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படத்தில் நான்கு மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அவருக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தர் நடிக்கும் இப்படத்திற்கு கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;