ஆர்யா, சித்தார்த், சமந்தா இளமை கூட்டணி!

ஆர்யா, சித்தார்த், சமந்தா இளமை கூட்டணி!

செய்திகள் 26-Jul-2014 10:10 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பெங்களூர் டேஸ்’. 50 நாட்களை கடந்து இன்னமும் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை அஞ்சலி மேனன் இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் வசூலில் சாதனை படைத்துள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ரீ-மேக் செய்ய, பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு மற்றும் தமிழில் இப்படத்தை இயக்கும் பெறுப்பை பிரபல தெலுங்கு பட இயக்குனர் பொம்மரிலு பாஸ்கரன் ஏற்றிருக்கிறார். மலையாளத்தில் ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் போலி, நஸ்ரியா நசீம் நடித்த கேரக்டர்களில் முறையே ஆர்யா, சித்தார்த், நாகசைதன்யா, சமந்தா ஆகியோர் நடிக்க இருக்கிறார்களாம். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராக இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டிரைலர்


;