விநாயக சதுர்த்திக்கு அதர்வாவின் ட்ரீட்!

விநாயக சதுர்த்திக்கு அதர்வாவின்  ட்ரீட்!

செய்திகள் 25-Jul-2014 11:19 AM IST VRC கருத்துக்கள்

‘பரதேசி’ படத்தைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘இரும்புக்குதிரை’. படு விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படபிடிப்பு முடிந்துவிட்டதாம்! தற்போது படத்தின் போஸ்ட் புரொட்கஷன் வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் இப்படக் குழுவினர் படத்தின் ஆடியோவை ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், படத்தை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம். யுவராஜ் போஸ் இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்! ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். ‘பரதேசி’ படத்தில் வித்தியாசமாக நடித்து பலரது பாராட்டை பெற்ற அதர்வாவின் ‘இரும்புக்குதிரை’ அவரது ரசிகர்களுக்கு விநாயக சதுர்த்தி ‘ட்ரீட்’டாக வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;