தல படத்திற்கு ஹாரிஸின் முதல் பாட்டு!

தல படத்திற்கு ஹாரிஸின் முதல் பாட்டு!

செய்திகள் 24-Jul-2014 6:06 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்க, அஜித் நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முதலாக இசை அமைக்கிறார் அல்லவா? இந்தப் படத்தில் அஜித்துக்கு அனுஷ்கா, த்ரிஷா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்க, இப்போது அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கௌதம் மேனன். இந்தப் படத்தில் அஜித் - த்ரிஷா ஜோடிக்கான ஒரு ரொமான்டிக் பாடலை தாமரை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை பாடகர் கார்த்திக்கின் குரலில் தற்போது பதிவு செய்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த தகவலை ஹாரிஸ் ஜெயராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்டியிருக்கிறார். ஏற்கெனவே ஹாரிஸ் – கௌதம் கூட்டணி நிறைய ஹிட் பாடல்களை தந்துள்ள நிலையில், ஹாரிஸ் முதன் முதலாக அஜித்துடன் இணைந்துள்ள இப்படத்தின் பாடல்களையும் ஹிட் அடிப்பார் என்றே எதிர்பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;