நஸ்ரியாவின் முதல்-கடைசிப் படம்!

நஸ்ரியாவின் முதல்-கடைசிப் படம்!

செய்திகள் 24-Jul-2014 10:44 AM IST Chandru கருத்துக்கள்

‘பட்’டென அறிமுகமாகி, ‘ஹிட்’டென படங்களைத் தந்து, ‘சட்’டென ரசிகர்கள் இதயத்துக்குள் நுழைந்தவர் நஸ்ரியா நசீம். 2006ஆம் வருடம் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது இந்த அழகுப் புயல்! அதன் பின்னர், 2013ஆம் ஆண்டு ‘மேட் டாட்’ படத்தின் மூலம் நாயகி அவதாரம் எடுத்த நஸ்ரியா, தமிழில் முதலில் நடிக்க ‘கமிட்’டான படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’. அதன் பிறகு சற்குணம் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘நய்யாண்டி’ படத்திலும், பின்னர் தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் தயாரான ‘நேரம்’ படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அவரின் நடிப்பில் முதலில் வெளிவந்தது என்னவோ ‘நேரம்’தான். இப்படம் தந்த நல்ல நேரம் அவருக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதன் பிறகு வெளிவந்த ‘நய்யாண்டி’ படம் வெற்றிப்படமாக அமையாத போதிலும், நஸ்ரியாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதற்கடுத்து வெளிவந்த அட்லியின் ‘ராஜா ராணி’ படத்தில் கொஞ்ச நேரமே வந்துபோனாலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தது நஸ்ரியாவின் ‘கீர்த்தனா’ கேரக்டர். இப்படத்தில் தன் சொந்தக்குரலிலேயே ‘டப்பிங்’ பேசினார். அதோடு கடந்த வருடத்திற்கான ‘அறிமுக நடிகை’ விருதையும் விஜய் அவார்ட்ஸ் கொடுத்தது.

இன்னொருபுறம் மலையாளத்திலும் இவர் நடிப்பில் படங்கள் வரிசையாக வெளிவந்தன. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘பெங்களூர் டேஸ்’ படமும் சூப்பர்ஹிட். அனேகமாக மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் கடைசிப்படமாக இதுவே இருக்கும். அதேபோல் தமிழிலும் இன்று வெளியாகவிருக்கும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’தான் அவர் நடிப்பில் வெளிவரும் கடைசிப்படமாக இருக்கும். காரணம்.... நடிகர் பஹத் பாசிலுக்கும், நஸ்ரியாவுக்கும் திருமண நிச்சயம் முடிந்ததும் அவர் முதலில் அறிவித்தது ‘நான் திருமணத்திற்குப் பிறகு நடிக்கப்போவதில்லை’ என்பதுதான். சொன்னதைப்போலவே, அவருக்கு வந்த பல வாய்ப்புகளையும் அதன்பிறகு அவர் தவிர்த்துவிட்டார். தமிழைப் பொறுத்தவரை, முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, கடைசியாக வெளிவரும் படமாக நஸ்ரியாவுக்கு அமைந்துவிட்டது ‘திருமணம் எனும் நிக்காஹ்’. வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி கேரளாவில் நடைபெறவிருக்கிறது நஸ்ரியா - பஹத் பாசில் திருமணம்.

அவரின் சினிமா பயணம் மிகக்குறுகியதாக இருந்தாலும், பெரிய அளவில் தன் வரவை பதிவு செய்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் (60 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்) ஒரே மலையாள நடிகை இவர் மட்டுமே! திரைப்பயணம்போலவே நஸ்ரியாவின் வாழ்க்கைப் பயணமும் ஜெயிக்க வாழ்த்துவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;