கௌதம் மேனன் படத்தில் லேடி அஜித்!

கௌதம் மேனன் படத்தில் லேடி அஜித்!

செய்திகள் 24-Jul-2014 10:29 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிகொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்க, படம் சம்பந்தமாக புதுப் புது தகவல்களும் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் அஜித்துடன் ‘லேடி அஜித்’ ஒருவரும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதென்ன, அஜித் லேடியாக நடிக்கிறாரா? என்று யாரும் வியப்படைய வேண்டாம்! கௌதம் மேனன் தேவி அஜித் என்ற மலையாள நடிகை ஒருவரை இப்படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க வைக்கிறார். இவர் ஒரு சில மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளவர் என்பது குறிப்பிட்த்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;