விக்னேஷ் நடிக்கும் திகில் படம்!

விக்னேஷ் நடிக்கும் திகில் படம்!

செய்திகள் 23-Jul-2014 4:39 PM IST VRC கருத்துக்கள்

‘காயன்ஸ் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி, வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கும் படம் ‘அவன் அவள்’ . இந்த படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா இருவரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்கிரீஷ் மிரினாளி. படம் பற்றி இயக்குனர் ராம்கிரீஷ் மிரினாளி கூறும்போது,

‘‘குற்றம் ஒன்றை செய்துவிட்டு போலீஸிடம் இருந்து தப்பிக்க அடர்ந்த காட்டிற்குள் அடைக்கலமாகிறான் வெங்கடகிருஷ்ணன். காட்டில் பெரிய பங்களா ஒன்றில் உள்ள ஒரு பெண் ஒருவருடன் பழக்கமாகிகிறது. அந்த பழக்கம் காதலாக மாறி திருமணமும் செய்கிறான். இருவருக்கும் உடல் ரீதியான நெருக்கமும் உண்டாகிறது. அதற்க்கு பிறகு அவள் காணாமல் போகிறாள். யார் அவள்? என்ற திகில் கேள்விக்கு விடைதான் இப்படத்தின் திரைக்கதை. நடிகர் விக்னேஷுக்கு இது ஒரு திருப்புமுனை படமாக இருக்கும்’’ என்றார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;