ஒழுக்கமான காதலை சொல்லும் ‘அகத்திணை’

ஒழுக்கமான காதலை சொல்லும்  ‘அகத்திணை’

செய்திகள் 23-Jul-2014 10:23 AM IST VRC கருத்துக்கள்

ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அகத்திணை’. இப்படத்தில் கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளு சபா மனோகர், சுவாமிநாதன், நளினி, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ முதலானோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் யு.பி.மருது. இவர் சன் டிவியில் ஒலிபரப்பான ‘அத்திப்பூகள்’ என்ற வெற்றி தொடரை இயக்கியவர். ‘அகத்திணை’ படம் பற்றி இயக்குனர் மருது கூறும்போது,
‘‘எனக்கு சின்னத்திரையில் அத்திப்பூகள் மூலமாக ஆதரவு கொடுத்த மக்கள் வெள்ளித்திரையிலும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அகத்திணை என்பதற்கு ஒழுக்கமான காதல் என்று அர்த்தம். காதலுக்காக காதலை தவிர எதையும் தியாகம் செய்யலாம். அதை உணர்வு பூர்வமாக சொல்லும் ஒழுக்கமான ஒரு காதல் கதை தான் இந்த படம். பழந்தமிழ் இலக்கியத்தில் காதல் பற்றிய உணர்வுகளை அகத்திணையில் பாடப்பட்டுள்ளதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்று ‘அகத்திணை ’ என்று பெயர் வைத்துள்ளோம். தன் மனைவியை இழந்த கணவன், இனி வாழும் வாழ்க்கை தன் மகளுக்காக என ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னை அர்ப்பணித்து பாதுகாத்து பாசத்துடன் மகளை வளர்த்து வருகிறார். தந்தை மகள் பாசத்திற்கு இடையே தன் உயிரை காப்பாற்றிய நாயகன் மீது காதல் வயப்படுகிறாள் மகள். தந்தை பாசம் ஒருபக்கம், காதல் மறுபக்கம், காதலா, பாசமா என்று அவள் எடுக்கும் முடிவு, இறுதியில் என்ன விளைவை ஏற்படுத்தியது என்பது இப்படத்தின் கதை’’ என்றார்.

இந்தப் படத்திற்கு கவிப் பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, மரியா மனோகர் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;