பதவியேற்கத் தயாராகும் ‘துணை முதல்வர்’

பதவியேற்கத் தயாராகும் ‘துணை முதல்வர்’

செய்திகள் 23-Jul-2014 9:58 AM IST Chandru கருத்துக்கள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக கே.பாக்யராஜ் களமிறங்கியிருக்கும் ‘துணை முதல்வர்’ படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அனுகிரதா ஆர்ட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதும் பாக்யராஜ்தான். ‘மத்திய சென்னை’ படத்தை இயக்கிய ஆர்.விவேகானந்தன் இப்படத்தையும் இயக்கி வருகிறார். பாக்யராஜுடன் முக்கிய வேடமென்றில் ஜெயராமும் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் நாயகிகளாக ஸ்வேதா மேனனும், சந்தியாவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவுற்று, அதற்கான எடிட்டிங் வேலைகளும் நடந்து முடிந்துள்ளதாம். இன்னும் இரண்டு பாடல்களும், பேட்ஜ் ஒர்க்கிற்காக ஒருசில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். அரசியலைப் பின்னணியாகக் கொண்ட இப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் ‘ரஷ்’ பார்த்த பாக்யராஜ், படம் நன்றாக வந்திருப்பதால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம். இதனால் இந்த ‘துணை முதல்வர்’ விரைவில் தியைரங்குகளில் பதவியேற்பார் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முப்பரிமாணம் சொக்கி போறாண்டி வீடியோ பாடல்


;