சூர்யாவுக்காக உருவான கதையில் கார்த்தி!

சூர்யாவுக்காக உருவான கதையில் கார்த்தி!

செய்திகள் 22-Jul-2014 2:45 PM IST VRC கருத்துக்கள்

‘அஞ்சான்’ படத்தின் ஆடியோ சிடி, சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நாளை கடைகளில் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த ‘அஞ்சான்’ விழாவில், நடிகர் சூர்யாவிடம் ரசிகர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அதில் ஒரு கேள்வியாக ‘‘லிங்குசாமி உருவாக்கிய நான்காவது கதையைத்தான் நீங்கள் தேர்வு செய்தீர்களாமே? அப்படியானால் மத்த ஸ்கிரிப்ட்டுகள் சரியில்லையா?’’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, ‘‘எல்லா கதையுமே நல்லாதான் இருந்துச்சு. ஆனால், என்னுடைய தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுவதற்கான ஸ்கோப் உள்ள கதையாவும், எனக்கு செட்டாகிற மாதிரியும் ‘அஞ்சான்’ இருந்ததாலதான் அதைத் தேர்வு செஞ்சேன். இன்னும் சொல்லப்போனா அந்த மூணு கதையில ஒண்ணான ‘எண்ணி ஏழு நாள்’ படத்துலதான் இப்போ கார்த்தி நடிக்கிறாரு’’ என்று சொன்னார்.

ஆக, அண்ணனுக்காக உருவாக்கப்பட்ட கதையில் தம்பி நடிக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;