பாடலாசிரியர்களுக்கு கௌரவம் தந்த ‘அஞ்சான்’

பாடலாசிரியர்களுக்கு கௌரவம் தந்த ‘அஞ்சான்’

செய்திகள் 22-Jul-2014 12:41 PM IST Chandru கருத்துக்கள்

‘யுடிவி’, ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படப் பாடல்களின் விஷுவல்கள் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கும் விழா நடைபெற்றது. வழக்கமாக சூர்யா படத்தின் ஆடியோ விழா மேடையில் தமிழ்த் திரையுலக முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இடம்பிடித்திருப்பர். ஆனால், இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக ‘அஞ்சான்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், மதன் கார்க்கி, விவேகா, கபிலன் மற்றும் படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கும் சூர்யா என பாடல்களை உருவாக்கியவர்களுக்கு விழா மேடையில் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இவர்களுடன் ‘யுடிவி’ தனஞ்செயன், லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சூரி, வசனகர்த்தா பிருந்தா சாரதி ஆகியோருடன் படத்தில் பணியாற்றிய முக்கிய டெக்னீயஷன்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விவேகாவின் வரிகளில் பென்னி தயாள், ஸ்வேதா பண்டிட் பாடிய ‘ஒரு கண் ஜாடை....’ என்ற பாடலின் ஆடியோவுடன் கூடிய பாடல் வரிகள் ஒளிபரப்பு செய்யட்டது. பின்னர் ‘பேங்... பேங்... பேங்...’ பாடலும், சூர்யா பாடிய ‘ஏக் தோ தீன் சார்...’ பாடலின் வீடியோவும் ஒளிபரப்பட்டது. விழா முடிவில் ‘அஞ்சான்’ படத்தின் பாடல் சிடியை வந்திருந்தவர்களுக்கு வழங்கினார்கள். ‘அஞ்சான்’ படத்தின் ஆடியோ சிடி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நாளை முதல் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;