7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் - விஷால்!

7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் - விஷால்!

செய்திகள் 22-Jul-2014 12:02 PM IST Chandru கருத்துக்கள்

2007ஆம் ஆண்டு பொங்கலை ‘இளையதளபதி’ ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். அதற்குக் காரணம், ‘தல தளபதி’யின் ‘ஆழ்வார்’ மற்றும் ‘போக்கிரி’ படங்கள் ஒரே நேரத்தில் மோதிக் கொண்டதுதான். இந்த இரண்டு படங்களுடன் இன்னொரு படமாக வெளிவந்தது விஷாலின் ‘தாமிரபரணி’. இந்த மூன்று படங்களில் விஜய்யின் ‘போக்கிரி’ சூப்பர் ஹிட்டாக, அஜித்தின் ‘ஆழ்வார்’ பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைச் சந்தித்து. ஆனால், ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ‘தாமிரபரணி’ இந்த இரண்டு பெரிய படங்களுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் ரசிகர்களிடம் வரவேற்பையும், ஓரளவு வசூலையும் குவித்தது.

தற்போது மீண்டும் அதேபோல் ஒரு சூழ்நிலை இந்த வருட தீபாவளிக்கு உருவாகியிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படமும், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘பூஜை’ படமும் இந்த தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ‘பூஜை’ படம் கிட்டத்தட்ட படப்பிடிப்பு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டது. இன்னும் க்ளைமேக்ஸும், பாடல்களும் மட்டுமே ஷூட்டிங் செய்ய வேண்டியிருக்கிறதாம். அதேபோல் ‘கத்தி’யும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் மாதம் இந்த இரண்டு படங்களின் ஆடியோவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, 2007ஆம் ஆண்டு பொங்கலைப்போல் இந்த வருட தீபாவளிக்கும் விஜய், விஷால் படங்கள் மோதப்போவது உறுதியாகிவிட்டது.

கடைசி நேரத்தில் இந்த ரேஸில் ‘அஜித் 55’யும் இணைந்தால் இந்த தீபாவளிக்கு தியேட்டர்களில் சரவெடிதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;