‘அனுஷ்கா’வுக்கு 10 வயசுதான் ஆகுதாம்!

‘அனுஷ்கா’வுக்கு 10 வயசுதான் ஆகுதாம்!

செய்திகள் 22-Jul-2014 11:11 AM IST Chandru கருத்துக்கள்

தலைப்பைப் படித்துவிட்டு ‘என்னது.... அனுஷ்காவுக்கு 10 வயசா..?’ என யாரும் அதிர்ச்சியாக வேண்டாம். 1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதியே இந்த உலகத்தில் அவதரித்துவிட்டார் அனுஷ்கா. அப்படிப் பார்த்தால் அவருக்கு வயது தற்போது 33 ஆகிறது. பின் எப்படி 10 வயது என்று கேட்கிறீர்களா? அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அனுஷ்காவின் உண்மையான பெயர் உங்களுக்குத் தெரியுமா? ‘ஸ்வீட்டி ஷெட்டி’ என்பதுதான் அவருடைய ஒரிஜினல் பெயர். சினிமாவுக்காக அவர் வைத்துக் கொண்ட பெயர்தான் அனுஷ்கா ஷெட்டி. தன் பெயரை அனுஷ்கா என்று மாற்றி, தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்து ‘சூப்பர்’ (ஜூலை 21, 2005) என்ற படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று முதல் 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அவர். எனவே, நடிகை ‘அனுஷ்கா’ என்ற பெயருக்கு வயது 10தான் ஆகிறது என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா?

2006ல் ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழில் கால்பதித்த அனுஷ்காவுக்கு, 2009ல் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘அருந்ததீ’ படமே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு தமிழிலும் தெலுங்கிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார் அம்மணி. ‘ரெண்டு’ படத்திற்குப் பிறகு தமிழில் விஜய்யுடன் ‘வேட்டைக்காரன்’, சூர்யாவுடன் ‘சிங்கம்’, ‘சிங்கம்2’, விக்ரமுடன் ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’, சிம்புவுடன் ‘வானம்’, கார்த்தியுடன் ‘சகுனி’, ‘அலெக்ஸ்பாண்டியன்’, ஆர்யாவுடன் ‘இரண்டாம் உலகம்’ என தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் ஜோடி போட்டுள்ளார். தற்போது தமிழில் அஜித்துக்கு ஜோடியாக கௌதம் மேனன் படத்திலும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்திலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி’ படத்திலும், இன்னொரு வரலாற்றுப் படமான ‘ருத்ரம்மா தேவி’யிலும் தெலுங்கில் பிஸியாக இருக்கிறார் அம்மணி.

9 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெற்றிகரமான நாயகியாக நடித்து த்ரிஷா, நயன்தாரா வரிசையில் இடம் பிடித்துவிட்டார் அனுஷ்கா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;