பிரசாந்த் படத்தில் ரம்யா நம்பீசன்!

பிரசாந்த் படத்தில் ரம்யா நம்பீசன்!

செய்திகள் 22-Jul-2014 11:02 AM IST VRC கருத்துக்கள்

பிரசாந்த நடித்து வரும் படம் ‘சாஹசம்’. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பிரசாந்துடன் பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி ஒரு ஸ்பெஷல் டான்ஸில் ஆடவிருக்கிறார். இந்த நடனத்துக்கான பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்க, தமன் இசையில் நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார். இந்த பாடல் பதிவு நேற்று முன் தினம் சென்னையில் நடந்தது. இந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் சென்னையில் நடைபெறவிருக்கிறது. அறிமுக இயக்குனர் அருண் ராஜ்வர்மா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை தொடர்ந்து பல வெளிநாடுகளிலும் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரூஸ் லீ - டீசர்


;