‘குயின்’ தெலுங்கு ரீ-மேக்கில் சார்மி?

‘குயின்’ தெலுங்கு ரீ-மேக்கில் சார்மி?

செய்திகள் 22-Jul-2014 10:25 AM IST VRC கருத்துக்கள்

கங்கணா ரணாவத் நடித்து ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன படம் ‘குயின்’. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எல்லா தென்னிந்திய மொழிகளிலும் ரீ-மேக் ஆகிறது. இப்படத்தின் ரீ-மேக் உரிமையை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் பெற்றுள்ளார். ‘குயின்’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க த்ரிஷா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்ததாகவும், ஆனால் இவர்களிடம் குறிப்பிட்ட நாட்கள் கால்ஷீட்ஸ் இல்லாததால் யாரும் உடனே நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகை சார்மியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாகவும், அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. சார்மி தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேம்பு - சூப்பர் டீலக்ஸ்


;