‘ஜிகர்தண்டா’ ரிலீஸ் பிரச்சனை - தயாரிப்பாளர் விளக்கம்

‘ஜிகர்தண்டா’ ரிலீஸ் பிரச்சனை - தயாரிப்பாளர் விளக்கம்

செய்திகள் 21-Jul-2014 5:48 PM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, சித்தார்த், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள ’ஜிகர்தண்டா’ படத்தின் ரிலீஸ் குறித்து முரண்பாடான சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்க, படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

‘‘சமீபத்தில் தனுஷ் நடித்த, ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை, கொஞ்ச காலத்திற்குப் பிறகு திரையரங்குகளுக்கு கிடைத்த பெரிய வெற்றிப் படமாக தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகிறார்கள். நான் எனது தயரிப்பில் சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ படத்தை இம்மாதம் 25- ஆம் தேதி வெளியிட இருந்தேன். ஆனால், எனது படத்தை பார்த்த விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ‘ஜிகர்தண்டா’ படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது ஒரு வாரம் தள்ளி வெளியிட்டால் அதிக தியேட்டர்கள் கிடைப்பதோடு, படமும் பெரிய வெற்றி பெறும் என்று கருதுகிறார்கள்.

ஆகவே, அவர்களின் கருத்தை மனதில் வைத்து, படம் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் ‘ஜிகர்தண்டா’ படத்தை ஆகஸ்ட் 1- ஆம் தேதி வெளியிட உள்ளோம். யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் படம் வாங்கிய அனைவரும் வெற்றி பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இவ்வாறு முடிவெடுத்துள்ளேன்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார் கதிரேசன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;