‘பூஜை’யின் காரைக்குடி ஷெட்யூல் முடிந்தது!

‘பூஜை’யின் காரைக்குடி ஷெட்யூல் முடிந்தது!

செய்திகள் 21-Jul-2014 5:10 PM IST VRC கருத்துக்கள்

காரைக்குடியில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஓரிரு பாடல் காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சியை படம் பிடித்தால் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். ஹரி இயக்கி வரும் இப்படத்தில் விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்க, சத்யராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ‘தாமிரபரணி’ படத்திற்கு பிறகு மீண்டும் விஷால் – ஹரி இணைந்துள்ள இப்படத்தை விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;