தனுஷ் ரசிகர்களின் அம்மா சென்டிமென்ட்!

தனுஷ் ரசிகர்களின் அம்மா சென்டிமென்ட்!

செய்திகள் 21-Jul-2014 4:47 PM IST Chandru கருத்துக்கள்

பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தைப் பற்றித்தான் தற்போது ஊரெங்கும் ஒரே பேச்சு. இந்த வருடத்தில் வெளிவந்த படங்களிலேயே முதல் மூன்று நாட்களில் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் அதிக லாபம் தந்த படம் இதுதானாம். இதற்கு முக்கியக் காரணம் இப்படம் வரிச்சலுகை பெற்றிருப்பதுதான். முதல் மூன்று நாட்களில் மட்டுமே கிட்டத்தட்ட 14 கோடிகளை தமிழகத்தில் வசூல் செய்து, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விஐபி’ படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று.... ‘‘அம்மா சரண்யா போன் செய்யும்போது அதை தனுஷ் எடுக்காமல் அலட்சியம் செய்வார். அடுத்த காட்சியில் அவர் அம்மா மாரடைப்பால் இறந்துவிடுவார்’’. இந்தக் காட்சிக்குப்பிறகு வரும் ‘‘அம்மா... அம்மா...’’ பாடல் தனுஷின் குரலில் ஒலித்தபோது ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுததாக தனுஷிற்கு ட்வீட் செய்து வருகின்றனர். அதோடு, ‘‘இந்தப் படம் பார்த்தபிறகு தங்கள் அம்மா போன் செய்தால், உடனே எடுத்துப் பேசுவதாகவும் தன்னிடம் ரசிகர்கள் தெரிவித்ததாக’’ தனுஷ் ட்வீட் செய்துள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏமாளி - டீசர்


;