‘ஜிகர்தண்டா’வை முடக்க சதியா? சித்தார்த் கோபம்

‘ஜிகர்தண்டா’வை  முடக்க சதியா? சித்தார்த் கோபம்

செய்திகள் 21-Jul-2014 2:28 PM IST Chandru கருத்துக்கள்

‘ஜிகர்தண்டா’ படம் வரும் 25ஆம் தேதி வெளியாகாது என சில இணையதளங்களில் செய்தி பரவ, அதை மறுத்து சித்தார்த்தும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜும் நேற்று இரவு, ‘‘ஜிகர்தண்டா வரும் 25ஆம் தேதி வெளியாவது உறுதி. வேலையில்லாமலிருக்கும் சிலர் கிளப்பும் வதந்திகளை தயவுசெய்து நம்ப வேண்டாம்’’ என ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு விளக்கமளித்தனர். இந்நிலையில் படம் வரும் 25ஆம் தேதி கண்டிப்பாக வெளிவராது என்ற செய்தி சித்தார்த்தின் காதுகளுக்கு நம்பத்தகுந்தவர்களிடமிருந்து தற்போதுதான் கிடைத்த்திருக்கிறது. அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பேசியுள்ளார் அவர். அதில்,

‘‘மன்னியுங்கள் ஜிகர்தண்டா ரசிகர்களே.... வெளியிலிருந்து வந்த சில பிரஷர்களால் நம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. கார்த்திக், நான், எங்களோட டீம் அனைவருமே இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளோம். ஆனால், கொஞ்சமும் மரியாதை கொடுக்காமல், எங்களிடம் கலந்தாலோசிக்காமலேயே ரிலீஸை தள்ளிப்போட்டுள்ளனர். இந்த வேலையைச் செய்தது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர்களை இயக்கியது யாராக இருந்தாலும் சரி.... உங்களால் எங்களை தள்ளிப்போடத்தான் முடியும். தடுத்து நிறுத்த முடியாது. ஒரு நல்ல படத்தை கொல்ல முடியாது. சினிமாவை நேசிக்கும் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள். எப்போது படம் வெளியானாலும் உங்களுடைய ஆதரவு நிச்சயம் தேவை! ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நாங்கள் இன்று இருக்கிறோம். தியேட்டர் லிஸ்ட்டுடன் கூடிய நாளைய ‘ஜிகர்தண்டா’ விளம்பரம் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இப்படி நடந்தது, என் இதயத்தை நொறுங்கச் செய்துவிட்டது. கடவுள்தான் சினிமாவைக் காப்பாற்ற வேண்டும். ஏதாவது அதிசயம் நடக்க வேண்டும். ரிலீஸ் தேதி கிடைப்பதற்காக வேண்டிக் கொள்கிறேன்’’ என தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார் சித்தார்த்.

கடைசியாக கிடைத்த தகவலின்படி ‘ஜிகர்தண்டா’வை வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;