‘கொம்பனு’க்கு இசை அமைக்கும் ஜி.வி.

‘கொம்பனு’க்கு இசை அமைக்கும் ஜி.வி.

செய்திகள் 21-Jul-2014 1:33 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடித்துள்ள ‘மெட்ராஸ்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி முத்தையா இயக்கும் ‘கொம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, ராஜ்கிரண் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். ஏற்கெனவே கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘சகுனி’ படங்களுக்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார் தான் ‘கொம்பன்’ படத்திற்கும் இசை அமைக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இப்போது சில படங்களுக்கு இசை அமைத்து வருவதோடு ‘பென்சில்’, ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;