ஜேம்ஸ் வசந்தனின் புதிய முயற்சி!

ஜேம்ஸ் வசந்தனின் புதிய முயற்சி!

செய்திகள் 21-Jul-2014 11:32 AM IST VRC கருத்துக்கள்

நிகழ்ச்சி தயாரிப்பாளரும், தொகுப்பாளரும், இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் நமக்கு அறிமுகமாகிறார். அத்துடன் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். இந்தப் படம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது, ‘‘மியூசிக்கல் மூவி’ என்று நிறைய படங்கள் வந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் கேட்க, இனிமையான பாடல்கள், பார்க்க அழகான இடங்களை கட்டினால் மட்டும் அது மியூசிக்கல் மூவி ஆகாது. அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளே தன் சொந்தக் குரலில் பாடி நடித்தால்தான் அது மியூசிக்கல் மூவி! ‘வானவில் வாழ்கை’ படத்தை அப்படியொரு படமாக உருவாக்கி வருகிறேன். இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் உள்ளன! கர்நாடிக், ,ஹிந்துஸ்தானி, வெஸ்டன், ராக், பாப் என இசையில் எத்தனை வகை இருக்கிறதோ அத்தனையும் இதில் இருக்கும்.

இப்படி ஒரு படம் பண்ணணுங்கிறது என்னோட லட்சிய கனவா இருந்தது. இப்போதான் அதுக்கான நல்ல சந்தர்பம் அமைஞ்சது. ஒரு வருடமாக உழைத்து கதையை உருவாக்கி, ஆறு மாதத்துக்கு முன்னரே திரைக்கதையை செதுக்கி, வசனம் இயற்றி, இப்போது தஞ்சை அருகே உள்ள கல்லூரியில் படத்தை துவக்கி விட்டேன். இதன் கதை கல்லூரி கலைவிழாவை மைய்யமாக கொண்டது .இதில் நடிகர், நடிகைகள் என்று யாரும் கிடையாது. அனைவரும் படித்து முடித்த, படிக்கும் கல்லலூரி மாணவ மாணவிகளே!

இது ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். அதே நேரம் படம் பார்ப்பவர்கள், அனைவருக்கும் அவர்களின் கல்லூரி காலங்களை மீண்டும் நினைவில் மலர செய்யும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வானவில் வாழ்க்கை - டிரைலர் 2


;