‘‘வேலையில்லாதவர்களின் வதந்தியை நம்பாதீர்கள்’’ - கார்த்திக் சுப்பராஜ்

‘‘வேலையில்லாதவர்களின் வதந்தியை நம்பாதீர்கள்’’ - கார்த்திக் சுப்பராஜ்

செய்திகள் 21-Jul-2014 11:07 AM IST Chandru கருத்துக்கள்

‘பீட்சா’ படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வரும் 25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது ‘ஜிகர்தண்டா’. இப்படத்தில் சித்தார்த், லக்ஷ்மிமேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்க, இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இப்படம் தொடங்கியதிலிருந்தே ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தைப் பற்றி அவ்வப்போது சில வதந்திகளும் பரவிய வண்ணமே உள்ளன. இப்படத்தின் டிரைலர் வெளிவந்த சமயத்தில், ‘தி டர்ட்டி கார்னிவல்’ என்ற கொரியன் படத்தின் தழுவல்தான் ‘ஜிகர்தண்டா’ என இணையதளங்களில் செய்தி வெளிவந்தன. ஆனால், அந்த செய்திகளில் உண்மையல்ல என்பதை பறைசாற்றும் விதமாக அந்த வதந்தியையும் தங்களின் பட புரமோஷனுக்காகப் பயன்படுத்திக் கொண்டது ‘ஜிகர்தண்டா’ டீம்.

தற்போது, மீண்டும் ஒரு வதந்தியைக் கிளப்பியுள்ளார்கள். அதாவது வரும் 25ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் அந்தத் தேதியில் வெளியாகாது என சிலர் இணையதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதை மறுத்து ட்வீட் செய்துள்ள படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ‘‘ஜிகர்தண்டா வரும் 25ஆம் தேதி வெளியாவது உறுதி. வேலையில்லாமலிருக்கும் சிலர் கிளப்பும் வதந்திகளை தயவுசெய்து நம்ப வேண்டாம்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - டீசர்


;