‘விஐபி’யின் மூன்று நாள் கலெக்ஷன்?

‘விஐபி’யின் மூன்று நாள் கலெக்ஷன்?

செய்திகள் 21-Jul-2014 10:32 AM IST Chandru கருத்துக்கள்

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 18) அன்று வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு பட்டிதொட்டியெங்கும் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட்ட இப்படம் முதல் மூன்று நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய்களை கலெக்ஷன் செய்து மொத்த கோடம்பாக்கத்தையும் வாய்பிளக்க வைத்திருக்கிறது. இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே இப்படம்தான் மிகப்பெரிய கலெக்ஷன் செய்யும் என்ற பேச்சு இப்போதே நிலவத் தொடங்கிவிட்டது. அதோடு இதுதான் தனுஷின் மிகப்பெரிய ஓப்பினிங்கும். தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 14 கோடிகளை வசூல் செய்துள்ள ‘விஐபி’, வெளிநாடுகளிலேயே நான்கு நாட்களில் (வியாழன் ரிலீஸ்) கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளதாம். தனுஷ் படத்திலேயே வெளிநாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் படமும் இதுதானாம்.

இந்நிலையில் இந்த மிகப்பெரிய வெற்றி குறித்து ரசிகர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ள தனுஷ் அதுகுறித்து ட்விட்டரில், ‘‘இப்படி ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல... என்னுடைய கேரியரில் இவ்வளவு பெரிய ஓபனிங்கை எந்தப் படமும் சந்தித்ததில்லை. நிச்சயம் இப்படம் பிளாக்பஸ்டராகும். என்னுடைய கண்ணீரை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.’’ என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;