கௌதம் படத்தில் அப்பாவாக அஜித்!

கௌதம் படத்தில் அப்பாவாக அஜித்!

செய்திகள் 21-Jul-2014 10:14 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும், இன்னும் அதிகாரபூர்வமாக பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இந்தப் படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பது எல்லாருக்கும் தெரியும். அதில் ஒரு கேரக்டரில் அஜித், சின்ன பெண் குழந்தையின் அப்பாவாக நடிக்கிறாராம். ஏற்கெனவே ‘வரலாறு’, ‘அசல்’ ஆகிய படங்க்ளில் அப்பாவாக நடித்திருக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் த்ரிஷாவும் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறாராம் கௌதம் மேனன். ‘மங்காத்தா’ படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்துள்ளார் த்ரிஷா. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;