ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பரத், அருள்நிதி!

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பரத், அருள்நிதி!

செய்திகள் 21-Jul-2014 10:03 AM IST Chandru கருத்துக்கள்

10 வருடங்களுக்கும் மேலே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பரத் தனக்கான ‘பிரேக்கிங் பாயின்ட்’டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். வருடத்திற்கு வருடம் வித்தியாசமான கதைகளாகத் தேர்ந்தெடுத்து, அதற்காக மாறுபட்ட கெட்அப்களை உருவாக்கி நடித்து வரும் பரத்திற்கு இன்று (21&7&14) பிறந்தநாள். இன்னும் ஒரு சில வாரங்களில் வெளிவரவிருக்கிறது அவருடைய ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ திரைப்படம். ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கும் பரத்திற்கு அவரின் பிறந்தநாள் பரிசாக இப்படத்தின் வெற்றி அமையட்டும்!

இதேநாளில் இன்னொரு பிரபலமும் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர் நடிகர் அருள்நிதி! ‘வம்சம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் ‘உதயன்’, ‘மௌனகுரு’, ‘தகராறு’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ ஆகிய படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அருள்நிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில், அவரின் இப்படமும் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

களவாடிய பொழுதுகள் - டிரைலர்


;