அஜித், சூர்யா வரிசையில் இடம்பிடித்த தனுஷ்!

அஜித், சூர்யா வரிசையில் இடம்பிடித்த தனுஷ்!

செய்திகள் 19-Jul-2014 12:36 PM IST Chandru கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம் முதல் மூன்று நாட்களுக்கு பெரும்பாலான தியேட்டர்களில் ரிசர்வேஷன் முடிந்துவிட்டதாம். இதனால் கண்டிப்பாக இப்படம் ஹிட் வரிசையில் இடம்பிடிக்கும் என தியேட்டர்களிலும் உற்சாகம் பிறந்திருக்கிறது. அறிமுக இயக்குனர் வேல்ராஜ் இயக்கியிருக்கும் இப்படம் தனுஷிற்கு 25வது படம். இதேபோல் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் படமான ‘அமர்க்களம்’ அவருக்கு 25வது படம். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘சிங்கம்’ படம் அவருக்கு 25வது படம். ஆக... ‘25வது படம் வெற்றி’ என்ற வரிசையில் அஜித், சூர்யாவைத் தொடர்ந்து தற்போது தனுஷும் இடம்பிடித்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;