‘பீட்சா’வைப் பார்த்து மிரண்டுபோன பாலிவுட்!

‘பீட்சா’வைப் பார்த்து மிரண்டுபோன பாலிவுட்!

செய்திகள் 19-Jul-2014 11:40 AM IST Chandru கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்து வெளிவந்த ‘பீட்சா’ படம் தமிழில் அதிரிபுதிரி வெற்றியைப் பெற்று ‘ஹாரர்’ படங்களின் ட்ரென்ட்செட்டராக அமைந்தது. அதோடு இப்படத்தை பெங்காலியிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்து வெளியிட்டனர். அங்கேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்தனர். இப்படம் நேற்று (ஜூலை 18) உலகமெங்கும் வெளியாகி விமர்சகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதோடு இப்படம் 3டியிலும் வெளியாகியிருப்பதால் ‘பீட்சா’ காட்டிய பயத்தில் உறைந்துபோய் உள்ளனராம் பாலிவுட் ரசிகர்கள். இதுவரை வெளிவந்த பாலிவுட் ஹாரர் படங்களிலிருந்து இந்த ‘பீட்சா’ முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது என மும்பை வாலாக்கள் முணுமுணுக்கின்றனராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - டீசர்


;