த்ரிஷா, ஹன்சிகாவுக்கு ஒரே பதிலைச் சொன்ன சிம்பு!

த்ரிஷா, ஹன்சிகாவுக்கு ஒரே பதிலைச் சொன்ன சிம்பு!

செய்திகள் 19-Jul-2014 11:00 AM IST Chandru கருத்துக்கள்

‘அப்பாடா... ஒரு வழியா வந்துருச்சுப்பா...’ என சிம்பு ரசிகர்கள் ஏக்கப் பெருமூச்சு விடுமளவுக்கு நீண்....ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறது ‘வாலு’ டிரைலர். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குனர் விஜய் சந்தர். சிம்புக்கு ஜோடியாக ஹன்சிகா, காமெடிக்கு சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் டிரைலரில் சிம்புவின் ஒரு சின்ன டயலாக் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை ரசிகர்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறது. அது... சிம்புவைப் பார்த்து ஹன்சிகா ‘‘ஐ ஹேட் யூ...’’ எனச் சொல்ல பதிலுக்கு ‘‘தேங்க் யூ...’’ என சிம்பு சொல்வார். இதே டயலாக் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ‘‘நாம ப்ரண்ட்ஸாவே இருந்திடலாம் கார்த்திக்...’’னு ஒரு காட்சியில் சிம்புவை தியேட்டருக்குக் கூட்டிட்டு போய் த்ரிஷா சொல்லுவார். அந்த காட்சியின் முடிவில் சிம்பு கோபமாய் ஏதேதோ பேசி முடிக்க அதற்கு த்ரிஷா ‘‘ஐ ஹேட் யூ....’’ என சொல்லுவார். அப்போது பதிலுக்கு ‘‘தேங்க் யூ...’’ என சொல்வார் சிம்பு. யதேச்சையாக இந்த வசனம் வைக்கப்பட்டதா, அல்லது ‘விடிவி’யை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வைக்கப்பட்டதா என்பது நம்ம ‘யங் சூப்பர் ஸ்டாரு’க்கு.... ஸாரி... (அவருதான் பட்டம் வேணாம்னு சொல்லிட்டாரே...) சிம்புவுக்குதான் தெரியும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;