வருகிறார் எம்.ஆர்.ராதா குடும்ப வாரிசு!

வருகிறார் எம்.ஆர்.ராதா குடும்ப வாரிசு!

செய்திகள் 18-Jul-2014 4:59 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவை சேர்ந்த அனைவருக்கும் ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அது போன்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் மறைந்த பிரபல நடிகர். எம்.அர்.ராதாவின் கொள்ளுப்பேரனும், மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரனுமான பிரபாகரன் ஹரிஹரன். இவர் தன்னுடைய சொந்த நிறுவனமான ‘Haricane Studios’ சார்பில் ஒரு ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கவுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,

‘‘நான் பரம்பரையாக சினிமா தொழிலிருந்து வந்ததாலோ என்னவோ எனக்கு சர்வதேச அளவில் படம் தயாரித்து புகழ்பெறவேண்டும் என்ற ஆசை அதிகம். அந்த ஆசையின் உந்துதல்தான் என்னை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்தது. நான் தயாரிக்கப் போகும் படம், Bremen Town Musicians என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.

அனிமேஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பட்ஜெட் 45 மில்லியன் டாலர்ஸ் என்று திட்டமிடப்பட்டுள்ளது. Haricane Studios நிறுவனம் சார்பில் ‘woolfell’ என்கிற இன்னொரு அனிமேஷன் படத்தையும் தயாரிக்கவுள்ளேன். இப்படத்தில் பிரபல இந்திய நட்சத்திரங்களுடன் ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர். இந்த இரண்டு படங்களும் உலகஅரங்கில் இந்திய தொழிழ்நுட்ப கலைஞர்களின் திறமையை பறைசாற்றும்’’ என்கிறார் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன் .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;