‘ஜித்தன்’ ரமேஷின் திகில் படம்!

‘ஜித்தன்’ ரமேஷின் திகில் படம்!

செய்திகள் 18-Jul-2014 11:18 AM IST VRC கருத்துக்கள்

''பிரபலமான நடிக, நடிகையர் நடிக்கும்போதுதான் சில கதாபாத்திரங்கள் ஜெயிக்கும். அப்பொழுதுதான் அந்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் நினைவில் நிற்கும்’’ என்கிறார் ‘ஜித்தன் 2’ படத்தை இயக்கி வரும் அறிமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா. இவர் இப்படி குறிப்பிட்டிருப்பது இப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் ‘ஜித்தன்’ ரமேஷ், இனியா, வி.டி.வி.கணேஷ், தம்பி ராமையா, கதாநாயகியாக நடிக்கும் புதுமுகம் ஸ்ருதி முதலானோரைதான்! மேலும் அவர் ‘ஜித்தன் 2’ படம் குறித்து கூறும்போது, ‘‘திகில் மற்றும் மர்மம் சுற்றி பின்னப்பட்ட கதைகளுக்கு எப்பொழுதும் அந்தப் படத்தின் போஸ்டர்ஸ் பிரதானமாக இருக்கும் . அவ்விதமே 'ஜித்தன் 2' படத்தின் போஸ்டர்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும்’’ என்கிறார்! இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை வின்சென்ட் செல்வா ஏற்றிருக்க, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜித்தன் 2 - டிரைலர்


;