கோடியில் வசூலாகும் 2 லட்ச ரூபாய் ‘ஐஸ்க்ரீம்’

கோடியில் வசூலாகும் 2 லட்ச ரூபாய் ‘ஐஸ்க்ரீம்’

செய்திகள் 17-Jul-2014 1:36 PM IST Chandru கருத்துக்கள்

வித்தியாசத்திற்கும், பரபரப்புக்கும் பெயர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. செல்லமாக ஆர்.ஜி.வி. என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இவருடைய பெரும்பாலான படங்கள் ஹாரர், த்ரில்லர் வகையறாக்கள்தான்! அந்த வகையில் சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெலுங்கு படம் ‘ஐஸ்க்ரீம்’. நவ்தீவ், தேஜஸ்வி, சந்தீப்தி ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஒரு பங்களாவிற்குள்ளே நடைபெறுவதுபோல் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? 2,11,832 ரூபாய்தான் என்கிறார் இயக்குனர் ஆர்.ஜி.வி. ஆம்.... இதுதான் உண்மையாம்! இப்படத்தில் நடித்த நடிக, நடிகையர், டெக்னீஷியன்கள் உட்பட யாருக்கும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையாம். படப்பிடிப்பு நடத்தத் தேவையான ஒரு பங்களாவிற்காக மட்டும்தான் செலவு செய்தார்களாம். தற்போது, இப்படம் வெளியான மூன்று நாட்களில் மட்டுமே 75 லட்ச ரூபாய்க்கு மேல் கலெக்ஷன் செய்துவிட்டதாம். அதோடு தற்போது கோடிகளில் சென்று கொண்டிருக்கிறதாம் இப்படத்தின் வசூல். இதனால் விரைவில் வெற்றி விழா ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் இப்படத்தில் பங்காற்றியவர்களுக்கு சம்பளம் கொடுக்க உள்ளாராம் ஆர்.ஜி.வி.!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

365 டேஸ் - தெலுங்குப் பட டீஸர்


;