திருக்குறளிலிருந்து எடுத்த சினிமா தலைப்பு!

திருக்குறளிலிருந்து எடுத்த சினிமா தலைப்பு!

செய்திகள் 17-Jul-2014 12:32 PM IST inian கருத்துக்கள்

ஒரு படத்தின் தலைப்பை வைத்துக் கொண்டே அந்தப் படம் என்ன சொல்லப் போகிறது, அது எந்த மாதிரியான படம் என்பதை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். ஆனால் சமீப காலமாக வெளியாகும் படங்களின் பெரும்பான்மையான தலைப்புக்கள் குழப்பம் தரும். சில தலைப்புக்கள் கவனத்தை ஈர்க்கும். சில தலைப்புக்கள் படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும். சில சுத்தமான தமிழில் இருக்கும். இந்த வரிசையில் "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற குறளில் இருந்து ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்ற வார்த்தைகளை ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.
நடிகர் ஆதி வித்தியாசமாக தோற்றமளிக்கும் இப்படத்தின் விளம்பர போஸ்டரில் பல குறள்கள் அச்சிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘ஆதர்ஷா சித்ராலயா பிரைவேட் லிமிடெட்’ என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது. சத்ய பிரபாஸ் பினிசெட்டி இயக்குகிறார். வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் கோலிவுட்டை சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. குறளின் பொருளை வைத்து பார்க்கும்போது பேச்சால் கெட்ட ஒரு மனிதனை பற்றியதாக இருக்குமோ, என தோன்றுகிறது. எப்படியோ வித்தியாசமான படங்களைக் கொடுத்தால் நிச்சயம் பாராட்டுவார்கள் தமிழ் ரசிகர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆளுக்கு பாதி 50-50 - டீசர்


;