லிங்குசாமி துவங்கி வைத்த ‘சிவ ரகசியம்’

லிங்குசாமி துவங்கி வைத்த ‘சிவ ரகசியம்’

செய்திகள் 17-Jul-2014 10:42 AM IST inian கருத்துக்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படம் ‘பிளட் ஸ்டோன்’. இப்படம் உட்பட பல படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்தவர் 'அபிராமி' ராமநாதன். அத்துடன் படத்தயாரிப்பிலும், விநியோகத்திலும் ஈடுபட்டு வருபவர். இவர், பல தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக ‘சிவ ரகசியம்’ என்ற நெடுந்தொடரை தயாரிக்கவுள்ளார். இந்திரா சௌந்தர்ராஜன் கதை, திரைக்கதை எழுத, நித்தியானந்தம் இயக்குகிறார். ஜெகதீஷ், மகாலக்ஷ்மி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.‘‘ரிஷிகளின் வாழ்க்கையை விட சித்தர்களின் வாழ்க்கை திகிலுடன் கூடிய புதிராகவும், மர்மமாகவும் இருக்கும். இவர்களின் சித்த ரகசியங்களை தெரிந்துகொள்ள முற்படும் ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்பதை விறு விறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்லவிருக்கிறேன். இதுவரை கிடைக்காத ஆன்மீக தேடல்களுக்கு பல விளக்கங்கள் இத்தொடர் மூலம் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்’’ என்கிறார் இந்த தொடரை இயக்கும் நித்தியானந்தம். இந்த தொடரின் படப்பிடிப்பு நேற்று மாலை அபிராமி மெகாமால் வளாகத்தில் பூஜையுடன் துவங்கியது. நல்லம்மை ராமநாதன் கிளாப் அடிக்க, இயக்குனர் லிங்குசாமி கேமிராவை இயக்க, முதல் காட்சி படமானது. செப்டம்பர் 8-ஆம் தேதியிலிருந்து, இரவு 10 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஜீ தமிழ் தொலைகாட்சியில் இத்தொடர் ஓளிபரப்பாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;