அஜித் பட இயக்குனர் மரணம்!

அஜித் பட இயக்குனர் மரணம்!

செய்திகள் 17-Jul-2014 10:09 AM IST VRC கருத்துக்கள்

அஜித் நடித்த ‘உன்னைக்கொடு என்னை தருவேன்’ படத்தை இயக்கியவர் கவிகாளிதாஸ். மேலும் இவர் இயக்குனர் பாக்யராஜிடம் ‘ஒரு ஊர்ல ராஜகுமாரி’, ‘சித்து பிளஸ்-2’ , ‘சொக்கத்தங்கம்’, ‘பாரிஜாதம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘பீமாபுரம் பெல்லாடு’ என்ற படத்தின் கதை வசனகர்த்தாவும் இவரே! கடந்த சில நாட்களாக கவிகாளிதாஸ் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு சிகிச்சை எடுத்தும், நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கவிகளிதாஸ் நேற்று பகல் இரண்டரை மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 45. இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், அந்தியூர். அவருக்கு ப்ரியா என்ற மனைவியும், மூன்றரை வயதில் அமிர்தா என்ற குழந்தையும் உள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;