சன்னி லியோனுக்கு பதில் இனியா!

சன்னி லியோனுக்கு பதில் இனியா!

செய்திகள் 16-Jul-2014 4:15 PM IST VRC கருத்துக்கள்

கண்ணன் இயக்கி வரும் படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இப்படத்தில் விமல், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்க, சூரியும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு குத்துப் பாடல் இடம் பெறுகிறது என்றும், அதில் ‘வடகறி’ படத்தில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் ஆடவிருக்கிறார் என்றும் முதலில் பேசப்பட்டது. ஆனால் சன்னி லியோன் ஆடவில்லையாம்! அது வெறும் வதந்தி என்று சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் கண்ணன்! இப்போது, அந்த குத்துப் பாடலில் ஆட ‘வாகை சூடவா’ ஹீரோயின் இனியாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கண்ணன். இந்தப் பாடல் காட்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அடுத்த வாரம் படமாக இருக்கிறதாம்! டி.இமான் இசையில், நடிகை லட்சுமி மேனன் தமிழில் முதன் முதலாக பாடியுள்ள இப்பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைக்க இனியா அசத்தல் ஆட்டம் ஆட இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;