விழா இல்லை.... நேரடியாக கடைக்கு வரும் ‘அஞ்சான்’

விழா இல்லை.... நேரடியாக கடைக்கு வரும் ‘அஞ்சான்’

செய்திகள் 16-Jul-2014 1:31 PM IST Chandru கருத்துக்கள்

சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து உருவாகிக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் பிரம்மாண்டமாக வெளியிட முதலில் திட்டமிட்டிருந்தன யுடிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள். அதன் பிறகு அதில் ஒரு சிறிய மாற்றமாக விழா நடைபெறும் இடத்தை சென்னை டிரேட் சென்டருக்கு மாற்றினார்கள். ஆனால், தற்போது இதிலும் ஒரு மாற்றமாக விழா எதையும் நடத்தாமல் நேரடியாக கடைகளிலும், இணையதளங்களிலும் ‘அஞ்சான்’ பாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவிருக்கிறார்களாம். இதுகுறித்து ‘ட்வீட்’டியுள்ள ‘யுடிவி’ தனஞ்செயன், ‘‘ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘அஞ்சான்’ படத்தை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்ததுபோல் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ‘அஞ்சான்’ படத்தின் ஆடியோ விழா நடைபெறாது. திட்டமிட்ட தேதியில் விழா நடக்கவிருந்த இடத்திற்கான அனுமதி கிடைக்காததால் நேரடியாக கடைகளிலும், டிஜிட்டல் வடிவில் இணையதளங்களிலும் ‘அஞ்சான்’ பாடல்களை வெளியிடவிருக்கிறோம். ஆனால், 22ஆம் தேதி காலை பத்திரிகையாளர்களையும், சில குறிப்பிட்ட ரசிகர்களையும் சத்யம் திரையரங்கிற்கு அழைத்து ‘அஞ்சான்’ படத்தின் வீடியோ பாடல்களை ஒளிபரப்பி காட்ட இருக்கிறோம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ‘அஞ்சான்’ பாடல் விழா நடைபெறாது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;