நட்புக்காக ஜி.வி. - சைந்தவி பாடிய பாடல்!

நட்புக்காக ஜி.வி. - சைந்தவி பாடிய பாடல்!

செய்திகள் 16-Jul-2014 1:21 PM IST Inian கருத்துக்கள்

தமன்னா, அபர்னா, ஜி.வி.பிரகாஷ், பா.விஜய் உட்பட பலருக்கு பி.ஆர்.ஓ.வாகவும் மேனேஜராகவும் பணிபுரிந்து, ‘சிலந்தி’ படத்தின் மூலம் நடிகரானவர் ராஜஷந்ரு. தற்போது இவர் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மது மாது சூது’. இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் ‘சின்ட்ரல்லா….. சின்ட்ரல்லா...’ எனத் தொடங்கும் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலுக்கு இசையமைத்துள்ளவர் சத்யா.

‘மது மாது சூது’ படத்தில் இடம்பெறும் இப்பாடலானது, காதல் வாழ்க்கையில் உயிருக்கு உயிராய் இணைந்த புதுமண தம்பதிகளின் வாழ்க்கையை பற்றியது என்று கூறும் ராஜஷந்ரு, தன்னுடைய நட்பிற்காகவும் அன்பிற்காகவும் இப்பாடல் உருவாகுவதற்கு காரணமாக இருந்த பா.விஜய், சத்யா, ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோருக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;