சமந்தா, அனுஷ்காவை முந்திய நஸ்ரியா!

சமந்தா அனுஷ்காவை முந்திய நஸ்ரியா!

செய்திகள் 16-Jul-2014 11:55 AM IST Chandru கருத்துக்கள்

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ‘நய்யாண்டி’, ‘ராஜா ராணி’, ‘வாயை மூடிப் பேசவும்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்தவர் ‘மலையாள வரவு’ நஸ்ரியா நசீம். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘பெங்களூர் டேஸ்’ என்ற மலையாள படம் நல்ல வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெய்யுடன் நஸ்ரியா நடித்துள்ள ‘திருமணம் எனும் நிக்காஹ்’ வரும் 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அனேகமாக தமிழில் இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும். அதெல்லாம் சரிதான்.... சமந்தா, அனுஷ்காவை நஸ்ரியா எதில் முந்தினார் எனக் கேட்கிறீர்களா?

பிரபலங்களின் ‘ஸ்டேட்டஸ்’களை நிரூபிப்பதில் தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் தங்களுக்கிருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த வகையில் நடிகை அனுஷ்கா 2007ஆம் ஆண்டே தனக்கான அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தைத் துவங்க, இதுவரை 59 லட்சம் ரசிகர்கள் அதை ‘லைக்’ செய்துள்ளனர். அதேபோல் ‘கத்தி’, ‘அஞ்சான்’ படங்களின் நாயகி சமந்தாவால் கடந்த 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தை இதுவரை 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ‘லைக்’ செய்துள்ளனர். ஆனால், நஸ்ரியாம் நசீம் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே தனக்கான அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தைத் துவங்கினார். இந்தப் பக்கத்தை ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குள்ளாகவே பல முன்னணி நடிகைகளின் ஃபேஸ்புக் கணக்குகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நஸ்ரியா ரசிகர்கள் அதை ‘லைக்’கித் தள்ளியுள்ளனர். இதனால் சந்தோஷத்தில் மிதக்கிறார் அம்மணி. இத்தனைக்கும்... ‘நஸ்ரியா திருமணத்திற்குப் பிறகு நடிக்கப்போவதில்லை’ என்பது தெரிந்தும் அவரை ரசிகர்கள் இந்தளவுக்கு விரும்புவது ஆச்சரியமளிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;