முதல்வருக்கு கேயார் நன்றி!

முதல்வருக்கு கேயார் நன்றி!

செய்திகள் 16-Jul-2014 11:21 AM IST VRC கருத்துக்கள்

சென்னையிலுள்ள எம்.ஜி.ஆர்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி வளாகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் 2 குளிரூட்டப்பட்ட படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்படும் என்று நேற்று முன் தினம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு திரையுலகினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டு வரும் சூழ்நிலையில் திரையுலகுக்கு உதவி செய்யும் வகையிலும், திரைப்பட கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெறும் வகையிலும் 15 கோடி ரூபாய் செலவில் 2 நவீன படப்பிடிப்பு தளங்களை உருவாக்க இருப்பது கலையுலகுக்கு உரிய நேரத்தில் செய்யும் பெரிய உதவியாகும். இந்த அறிவிப்புக்கு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அது போலவே திரையுலகுக்கு பல வருடங்களாக சவாலாக இருக்கும் திருட்டு வி.சி.டி.யையும் முதல்வர் ஜெயலலிதாவால் தான் ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. இப்படி முதல்வரிடமிருந்து படி படியாக பல நல்ல செய்திகள் வரும் என கலையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;