தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஃபெஃப்சி!

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஃபெஃப்சி!

செய்திகள் 16-Jul-2014 11:18 AM IST Inian கருத்துக்கள்

ஃபெஃப்சியின் தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் ஆகியோர் கூட்டாக அளித்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்! எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றினை பரிசீலனை செய்து 14.7.2014 அன்று சட்ட சபையில் எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு குளிரூட்டப்பட்ட படப்பிடிப்பு அரங்கங்களை திறப்பதாக அறிவிப்பு செய்துள்ளீர்கள். இதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீவிரம் - டீசர்


;